Home இலங்கைஒரேபார்வையில் இலங்கையின் பேரனர்த்த தாக்கங்கள்!

ஒரேபார்வையில் இலங்கையின் பேரனர்த்த தாக்கங்கள்!

by admin

 

டிட்வா புயல் தாக்கம் – மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாகவும்,
அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது.

இரணைமடு குளத்தின் வெள்ளப் பாதுகாப்பு சுவர் உடைப்பெடுப்பு

இரணைமடுக் குளத்தின் நீரேந்துப் பகுதிகளுக்குக் கிடைத்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆயினும் , வான் நீர் பாயும் கால்வாயின் வெள்ளப் பாதுகாப்புச் சுவர் உடைப்பு எடுத்துள்ள நிலையில், குறித்த பகுதியில் வௌ்ளம் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மண்மேட்டை அகற்ற சென்றவர்கள் அனர்த்தத்தில்

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கவரம்மான பகுதியில் வீதியில் சரிந்த மண் மேட்டை அகற்றச் சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

அவர்கள் மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதற்கு மேலே இருந்த மண்மேடு மரம் ஒன்றுடன் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தின் காட்சிகள் ஒருவரது கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.

அவ்விடத்தில் இருந்த லொறி ஒன்றின் சாரதி தற்போது காணாமல் போயுள்ளார்.

மண் மேட்டில் சிக்கியிருந்த ஒரு ஊழியர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளார்.

மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு அவசர வௌ்ள எச்சரிக்கை

மகாவலி கங்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்த அதிக மழையின் காரணமாக, மகாவலி ஆற்றுப் படுகையின் கீழ் கரையோரப் பகுதிகளில் நிலவும் வெள்ள நிலைமை அதி தீவிர வெள்ள நிலைமையாக அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, திம்புலாகல, தமன்கடுவ, வெலிகந்தை, லங்காபுர, மெதிரிகிரிய, சேருவில, கந்தளாய், கின்னியா மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முடிந்தவரை விரைவாக அந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு – பலரை காணவில்லை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அலவத்துகொடை காவற்துறைப்  பிரிவுக்குட்பட்ட அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அங்கும்புர – அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகப் காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மண்சரிவில் மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள போதிலும், அது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்று காவற்துறைர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை நிவாரணக் குழுக்களால் கூட அந்த இடத்தைச் சென்றடைய முடியவில்லை.

வெலிமடையில் பாரிய மண்சரிவு – 2 சடலங்கள் மீட்பு

வெலிமடை – கெப்பெட்டிப்பொல காவல்  நிலையத்திற்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இராணுவம் மற்றும் காவற்துறைர்  இணைந்து காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிலாபம் பகுதி மக்களுக்கான அன்பான வேண்டுகோள்!

சிலாபம் சிறுவர் வைத்தியசாலையில் 35 சிறுவர்கள் பெற்றோருடன் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More