கிளிநொச்சி திருவையாறு மேற்கில் அமைந்துள்ள பத்து ஏக்கர் காணியை எஸ்கே அறிவுச்சோலை அமைப்புக்கு வழங்குவதே பொருத்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கரைச்சி பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பொது அமைப்புகளுக்கு காணி வழங்கும் விடயதிற்கு அனுமதி வழங்கும் கூட்டம் இடம்பெற்றது. இதன் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
எஸ்கே அறிவுச்சோலை எனும் அமைப்பை வைத்திருப்பவர் நல்ல பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார் எனவே அவருக்கே திருவையாறு மேற்கு பகுதியில் உள்ள குறித்த பத்து ஏக்கர் காணியை வழங்குவது பொருத்தமானது. குறித்த காணியின் உரிமையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு காணியை 25 இலட்சத்துக்கு மேல் விற்பனை செய்துள்ளனர் எனக்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு குறித்த விடயத்தை கொண்டுவருமாறு தான் எஸ்கே அறிவுச்சோலைக்கு ஆதரவாக தீர்மானம் மேற்கொண்டு தருவதாகவும் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்
இதேவேளை கரும்புத் தோட்டக் காணியையும் அதன் முன்னைய குத்தகையாளர்களுக்கு வழங்க முடியாது எனவும் அதனை காணியற்ற மக்களுக்கு வழங்கலாம் அல்லது ஏதேனும் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக ஒதுக்கி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இ;ந்தக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண காணி ஆணையாளர் மகேஸ்வரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன்,பளை பிரதேச செயலாளர் ப.ஜெயராணி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்