விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் – 1 மில்லியன் டொலர் பரிசு

டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்ததையொட்டி ஐ.சி.சி வழங்கிய கதாயுதத்தை இந்தியஅணித்தலைவர்  விராட் கோலி பெற்றுள்ளார்.  அஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இன்றையதினம்  இந்தியா வென்றதன்  மூலம் தொடர்ச்சியாக 7 டெஸ்ட் தொடர்களை வென்ற பெருமையை அணித்தலைவர் விராட் கோலி பெற்றுள்ளார்.

டெஸ்ட் அணிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன் பட்டத்துடன்   கதாயுதம் ஒன்றும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்  பரிசுத் தொகையாகவும் வழங்கப்படும்.

இந்த ஆண்டில் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ள இந்திய அணிக்கு அந்த கௌரவம்  கிடைத்துள்ளதனையடுத்து   ஐ.சி.சியின்  சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கதாயுதத்தை விராட் கோலியிடம் வழங்கினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply