143
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவிற்கு அருகில் வைத்து, போதைப்பொருள் கைமாற்ற முயன்ற போது நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை காவல்துறையினா் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் நல்லூர் காவல்துறையினா் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதுடன் சந்தேகநபரிடமிருந்து 4 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருக்கும் ஒருவரின் உத்தரவின் பேரில் (ஒப்பந்தம்), ஒருவரிடமிருந்து கஞ்சாவை பெற்று அதனை யாழ் நகர் பகுதியில் ஒருவரிடம் ஒப்படைக்கச் சென்றதாக அந்த உறுப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினரிடம் காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த கடத்தல் பின்னணியில் தொடர்புடைய கஞ்சாவை வழங்கிய நபர் மற்றும் அதனை பெற்றுக்கொள்ள காத்திருந்த நபர் ஆகியோரை கைது செய்ய விசேட தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love

