166
யாழ்ப்பாணம் தாளையடி கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் நீராடச் சென்ற போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் ஆழியவளை பகுதியைச் சேர்ந்த ஜெசிந்தன் (26 வயது) என்ற இளைஞராவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காகக் கடலில் நீராடிய போது, எதிர்பாராத விதமாக இவர் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டார்.
கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதி கடற்தொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று காலை சடலம் கரையொதுங்கியுள்ளது. மருதங்கேணி காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டதுடன், மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Spread the love

