158
கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் நிரந்தர கட்டிடம் அமைக்க வடக்கு மாகாண திட்டமிடல் அமைச்சின் மூலம் இருபது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாண சமூகசேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தினர் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண திட்டமிடல் அமைச்சின் மூலம் இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே சமூக சேவைகள் திணைக்களம் மூலம் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் குறித்த நிதி போதுமானதாக இல்லாதன் காரணமாக திட்டமிடல் அமைச்சின் ஊடாக குறித்த இருபது இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் ஏற்கனவே சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட பத்து இலட்சம் மாற்று வலுவுள்ளோர் சங்கத்திற்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்காது எனவும் சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்திற்கு தானும் தனது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் இருபது இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆனால் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் சார்பாக தங்களால் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிபிள்ளை தனது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மூன்று இலட்சமும், அரியரட்னம் இரண்டு இலட்சம் ரூபாவும் ,சிவாஜில்ஙகம் இரண்டு இலட்சம் ரூபாவும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர் என மாவட்ட மாற்றுவலுள்ளோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்
Spread the love