ஸ்பெயினின் தெற்குப் பகுதியான அண்டலூசியாவில் (Andalusia) நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18, 2026) மாலை வேளையில், இரண்டு அதிவேக புகையிரதங்கள் மோதிக்கொண்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கோர்டோபா (Cordoba) மாகாணத்தில் உள்ள அடாமுஸ் (Adamuz) நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலகாவிலிருந்து மேட்ரிட் நோக்கிச் சென்ற Iryo நிறுவனத்தின் அதிவேக புகையிரதம் தடம் புரண்டு, அருகில் இருந்த தண்டவாளத்தில் எதிரே வந்த Renfe நிறுவனத்தின் அதிவேக புகையிரதத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
மோதிய வேகத்தில் புகையிரதத்தின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தன. புகையிரதத்தில் இருந்த பயணிகள் சிலா் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
உயிரிழந்த 21 பேரில் ஒரு புகையிரத ஓட்டுநரும் அடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, மேட்ரிட் மற்றும் அண்டலூசிய நகரங்களுக்கு இடையேயான அனைத்து அதிவேக புகையிரதத்தி சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்து நடந்த இடம் நேர்க்கோட்டுப் பாதை என்பதால், புகையிரதம் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் (Pedro Sanchez), இந்தச் சம்பவத்தை “மிகுந்த வேதனைக்குரிய இரவு” எனத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Tag Words: #SpainTrainCrash #AndalusiaTragedy #AdamuzAccident #HighSpeedTrain #SpainNews2026 #Cordoba #RailSafety #Iryo #Renfe

