132
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி, திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் முற்பட்டபோது அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (பெப்ரவரி 2) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சம்பந்தப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 தேரர்கள் மற்றும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தது.
சிலையை அகற்ற முயன்றபோது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்கள் பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலதிக தகவல்களுக்கு எமது பக்கத்தைப் பின்தொடருங்கள்.
________________________________________
Spread the love

