Home உலகம்🚨 பாகிஸ்தானில்  குண்டுவெடிப்பு –  31 பேர் பலி  – 169 பேர் படுகாயம்

🚨 பாகிஸ்தானில்  குண்டுவெடிப்பு –  31 பேர் பலி  – 169 பேர் படுகாயம்

by admin

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியான தர்லாய் (Tarlai) பகுதியில் அமைந்துள்ள கதீஜா துல் குப்ரா (Khadija Tul Kubra) எனும் ஷியா பள்ளிவாசலில் இன்று (06-02-2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக நூற்றுக்கணக்கான மக்கள் பள்ளிவாசலில் கூடியிருந்த வேளையில் இந்தத் தற்கொலைத் தாக்குதல்

குறைந்தது 169 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தற்கொலைதாரி ஒருவர் பள்ளிவாசலின் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அங்கேயே குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும், ஜன்னல்கள் சிதறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை எந்தவொரு அமைப்பும் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் தலிபான் (TTP) அல்லது ஐஎஸ் (IS-K) அமைப்பினர் இதன் பின்னணியில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை வழங்க அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள PIMS (Pakistan Institute of Medical Sciences) மற்றும் பிற அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருதித் தேவைக்காகப் பொதுமக்கள் முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tag Words: #PakistanBlast #IslamabadMosque #TarlaiAttack #BreakingNews2026 #GlobalNews #TerrorismAlert #LKA #PeaceForPakistan

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More