அதேவேளை சபை அமர்வினைப் பார்வையிடுவதற்கு நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவு வழங்வதாக கூறப்பட்டமை தொடர்பாகவும் தெளிவு படுத்த வேண்டும். அந்த வகையில், சபை அமர்பினை பார்வையிடுவதற்கும் நல்லூர் பிரதேச சபை கொடுப்பனவு வழங்கி வருவதாக பொய்யான தகவலிலைத் தெரிவித்து தங்களை சிறுமைப்படுத்தியுள்ளவர்கள். அவர்கள் கூறுகின்ற வரதராஜன் பார்த்திபன் என்னும் நபர் வெளிவாரி அடிப்படையில் அலுவலகப் பணியாளராக உள்வாங்கப்பட்டு பணிபுரிகின்றார்.
நல்லூர் பிரதேச மக்களின் வாழ்வியல் மற்றும் உட்டுகட்டுமான மேம்பாட்டுக்காக செயற்படுகின்ற நல்லூர் பிரதேச சபை தன்னால் இயன்ற பணிகளினை இயலுமானவரை வினைத்திறனாக செய்து வருகின்றது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
#Nallur #JaffnaNews #LocalGovernment #StaffPayments #SriLankaPolitics #NallurPS

