Home உலகம்வெளிநாட்டு மாணவர்கள்  வெளியேற  அனுமதி  வழங்கிய ஈரான் 

வெளிநாட்டு மாணவர்கள்  வெளியேற  அனுமதி  வழங்கிய ஈரான் 

by admin

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு  நில எல்லைகள் (Land Borders) வழியாக வெளியேற ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் ஈரானில் இருந்து வெளியேறுவதற்கு  வழக்கமாகத் தேவைப்படும் விசேட வெளியேற்ற அனுமதி இன்றி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நில எல்லைகள் வழியாகவும் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்  மாணவர்களின் வெளியேற்றத்திற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு  ஈரானில் உள்ள அனைத்துப் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வெளியேறுவதால் அவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், தவணை இறுதியாண்டுப் பரீட்சைகள் மற்றும் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வேடு சமர்ப்பித்தல் ஆகியவற்றுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மாணவர்கள் பேருந்துகள் மூலம் ஆர்மீனியா , அஜர்பைஜான்   அல்லது துருக்கி  போன்ற அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தமது நாடுகளுக்குத் திரும்ப வெளிநாட்டுத் தூதரகங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.

#IranCrisis2026 #ForeignStudents #LandBorderExit #Tehran #StudentSafety #IndianStudentsInIran#EducationUpdate

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More