Home இலங்கைமத்திய கிழக்கு போர் அபாயம்: இலங்கையர்களைப் பாதுகாக்க அரசாங்கத்தின் ‘விசேட அவசர காலப் பிரிவு’ தயார்!

மத்திய கிழக்கு போர் அபாயம்: இலங்கையர்களைப் பாதுகாக்க அரசாங்கத்தின் ‘விசேட அவசர காலப் பிரிவு’ தயார்!

by admin

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் தளம்பலான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்   நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கு சுற்றுலா  சென்றுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஒரு சிறப்பு அவசர காலப் பதில் பிரிவு (Emergency Response Unit) ஒன்றை நிறுவியுள்ளது.

இலங்கையில் உள்ள உறவினர்கள் அல்லது மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் எந்தவொரு அவசரத் தேவைகளுக்கும்  +94 117 445641 ,  +94 112 207250  ஆகிய  தொலைபேசி  இலக்கங்கள் அல்லது   [email protected]  என்ற மின்னஞ்சல் ஊடாக 24 மணிநேரமும் தொடர்புகொள்ள முடியும்:

இந்தச் சேவையானது வாரத்தின் 7 நாட்களும், 24 மணிநேரமும் செயற்படும் என அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளை இந்தப் பிரிவு முன்னெடுக்கும்.

#SriLankaSafety #MiddleEastCrisis #EmergencyHelpLine #MigrantWorkers #MFA_SriLanka #24HourService #TouristSafety

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More