Home உலகம்“ஹார்முஸ் நீரிணையில் பரபரப்பு: அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!”

“ஹார்முஸ் நீரிணையில் பரபரப்பு: அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!”

by admin

 

சர்வதேச சந்தைக்கு எண்ணெய் விநியோகம் செய்யப்படும் மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்க எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ஈரான் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஈரானியப் புரட்சிகர காவற்படையினரால் ஏவப்பட்ட ஏவுகணைகள் கப்பலைத் தாக்கியதில் அங்கிருந்து கரும்புகை வெளியேறுவதை செயற்கைக்கோள் படங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏற்கனவே கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் நேரடிப் போர்க்கப்பல் அல்லது எண்ணெய் கப்பல் இலக்கு வைக்கப்பட்டிருப்பது பிராந்தியத்தில் முழு அளவிலான போர் வெடிப்பதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் (Pentagon) இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தனது கடற்படைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலதிகப் படைகளை வளைகுடாப் பகுதிக்கு அனுப்பியுள்ளது.

 

#IranVsUSA #USTankerAttack #StraitOfHormuz #OilMarketCrisis #GlobalConflict

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More