417
யாழ்ப்பாணம், பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் இன்று காலை உயிரிழந்த நிலையில் முதலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குறித்த பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்கங்களில் அதிகளவான முதலைகள் வசித்து வரும் நிலையில், அவை இரவு நேரங்களில் இரை தேடி வீதியோரங்களில் நடமாடுவது வழக்கமாகியுள்ளது.
அவ்வாறு வீதியில் நடமாடிக்கொண்டிருந்த வேளையில், அந்த வழியாகப் பயணித்த கனரக வாகனம் ஒன்று முதலையின் மீது ஏறியதாலேயே அது உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், இரவு நேரங்களில் அந்த வீதியைப் பயன்படுத்தும் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

#JaffnaNature #CrocodileAccident #PointPedro #Maruthankerny #WildlifeSafety
Spread the love

