166
இதில்200 பேர் (இதில் 180 பேர் சிறு காயங்களுடன் மீண்டும் பணியில் இணைந்துள்ளனர்; 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்).
அமெரிக்கா இதுவரை ஈரானில் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளது. இதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி உற்பத்தி நிலையங்கள் முக்கியமானவை. அதேவேளை, அமெரிக்காவின் 12 MQ-9 ரீப்பர் (Reaper) ரக ஆளில்லா வானூர்திகள் இப்போரில் அழிக்கப்பட்டுள்ளன.
வளைகுடா நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்திருந்த போதிலும், ஈரானின் இந்த பதில் தாக்குதல்கள் தமக்கு “அதிர்ச்சி” அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், உளவுத்துறை அறிக்கைகள் இத்தகைய தாக்குதல்கள் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்கனவே பட்டியலில் இருந்ததாகத் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமான ஈரான் – அமெரிக்க மோதல் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இப்போரில் இதுவரை சுமார் 200 வரையிலான அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 13 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்தான், பஹ்ரைன், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய 7 நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
Spread the love

