140
#JaffnaPoliceAttack #DrunkPoliceOfficers #TouristsAttacked #PointPedroHospital #PoliceMisconduct
Spread the love
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நடந்த ஒரு சர்ச்சையான சம்பவத்தில், காவல்துறைக் குழுவொன்று தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சுற்றுலா சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர்கள் உணவு சமைத்து மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அதே இடத்திற்கு சுற்றுலா சென்ற மற்றொரு குழுவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் பின்னர் கைக்கலப்பாக மாறி, அதில் இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மதுபோதையில் இருந்ததுடன், பொது இடத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும், அவர்கள் உத்தியோகபூர்வ வாகனத்தை தனிப்பட்ட பயணத்திற்குப் பயன்படுத்தியதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக காவல்துறை திணைக்கள மட்டத்தில் விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

#JaffnaPoliceAttack #DrunkPoliceOfficers #TouristsAttacked #PointPedroHospital #PoliceMisconduct