குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் இராணுவத்திற்கு அச்சுறுத்தலாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த அலுவலகமானது நாட்டின் அரசியல் தலைவர்களுக்கும் படையினருக்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்செயல்களக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான முதல் கட்ட நடவடிக்கையாக இந்தக் காரியாலயம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த அலுவலகமானது நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் கட்டுப்படாது செயற்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொரளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.