இந்நிலையில் நீந்துவதற்கு பார்வை தடையல்ல என்பதை வலியுறுத்துவதற்காக இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலுமான சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். அனுமதி கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகில் மற்றும் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றனர்.
திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 03.15 மணியளவில் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு வந்தடைந்தார். தொடர்ந்து 11 மணி , 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நீந்தி உள்ளார். இதன் மூலம் பார்வை திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார். தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த மாற்றுத்திறனாளியான ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


