Home இலங்கைமஹிந்த ராஜபக்ஸவிடம் விபரங்களைக் கோருகிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

மஹிந்த ராஜபக்ஸவிடம் விபரங்களைக் கோருகிறது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

by admin

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த சத்தியக்கடதாசியை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவரின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைவாக இதுவரை சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 23ஆம் திகதி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த சத்தியக்கடதாசியை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#MahindaRajapaksa #BriberyCommission #AssetDeclaration #SriLankaPolitics #Investigation

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More