15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
நிவித்திகல பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது தலைவர்கள் களவாடவில்லை எனவும், ஒரு குடும்பத்தை போசிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் போன்று இந்த அரசாங்கம் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்பினர் தங்களது இருப்பு பற்றி மட்டுமே சிந்தித்தார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் தமதுஅரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கு இந்த அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கும் – தலதா அதுகோரல:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
154
Spread the love