கொபெய்கனே பகுதியில் உள்ள தெதுறு ஓயா ஆற்றில் நீராடச் சென்ற போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த மேலும் 2 பேரின் சடலங்களும் பின்னர் மீட்கப்பட்டதால், மொத்த உயிரிழப்பு 8 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு சென்றதைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்த குடும்பத்தினருடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். அப்போது வலுவான நீரோட்டத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டதால் இந்த துயரமான விபத்து ஏற்பட்டுள்ளது.
# Thethuru Oya #Drowning #Death #River Accident #Sri Lanka #Tragedy #Police Report #Missing Persons #Bodies Recovered #Kadawatha Group

