Home இலங்கைஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

by admin

 

 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தெல்லிப்பளைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 கிராம் 440 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிரான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

விசாரணைகளின் முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலதிகமாக 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என மன்று உத்தரவிட்டுள்ளது.

#Jaffna #CourtVerdict #HeroinArrest #SriLankaNews #LegalAction #DrugPrevention #JaffnaNews

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More