Home இலங்கை“இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”

“இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”

by admin

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முன்னணி கல்வி நிறுவனங்களான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் மோதும் “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்” (Battle of the Hindu Brothers) 3-ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மே 22 மற்றும் 23-ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நிலவிய கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இப்போட்டிகளுக்கான புதிய திகதிகள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 மே 22 மற்றும் 23-ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இரு பாடசாலைகளின் முதன்மை அணிகளும் மோதவுள்ளன. அதனைத் தொடர்ந்து, இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர் சங்க அணிகளுக்கு இடையிலான விசேட 20-20 (T20) கிரிக்கெட் போட்டி மே 24-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள் மானிப்பாயில் நடைபெறுவதால், சொந்த மைதான சாதகத்துடன் (Home Advantage) மானிப்பாய் இந்துக்கல்லூரி களம் காண்கிறது. எனினும், சாவகச்சேரி இந்துக்கல்லூரி அணி அதற்குப் பலத்த சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகள் உண்மையில் கடந்த மே 15 மற்றும் 16-ஆம் திகதிகளில் நடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தன.  வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையினால் மைதானம் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.  தற்போது காலநிலை சீரடைந்து வருவதைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பு மற்றும் போட்டியின் தரத்தைக் கருத்திற்கொண்டு போட்டிகள் இந்த வார இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

#BattleOfTheHinduBrothers #JaffnaCricket  #ManipayHindu #ChavakachcheriHindu #BigMatch2026

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More