161
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்றைய தினம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது முக்கிய பதவிகளில் மாற்றம் செய்யப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. துணை மற்றும் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்படுவர் என முன்னதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், பதவிகளில் மாற்றம் செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கட்சி தெரிவித்துள்ளது.
Spread the love