யாழ்ப்பாணத்திற்கு இன்றைய திகதி சனிக்கிழமை (ஜூன் 27) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று அதன் செயற்பாடுகளைக் கண்டறிந்தார்.
இதன்போது, வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போது, வைத்தியசாலையின் தற்போதைய அத்தியாவசியத் தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மனிதவளத் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டது.
மக்களுக்கான சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வைத்தியசாலைக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை அமைச்சர் இதன்போது உத்தியோகபூர்வமாகக் கையளித்ததுடன், வைத்தியசாலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நூதன சாலையையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ச. சிறிபவனந்தராசா, க. இளங்குமரன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உட்பட முக்கிய அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
#Jaffna #JaffnaTeachingHospital #HealthMinistry #SriLankaNews #NalindaJayatissa #MedicalDevelopment #NPP #NorthernProvince

