49
2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாக அவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று, அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், சுரேஷ் சல்லே தொடர்ந்தும் அவர்களின் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love

