52
உங்களுக்கு எப்போது TV Licence தேவையில்லை?
எப்போது TV Licence கண்டிப்பாகத் தேவை?
கட்டண விபரம்:
பிரித்தானியாவில் தொலைக்காட்சி உரிமம் (TV Licence) பெறுவது தொடர்பாகப் பலருக்கும் உள்ள சந்தேகங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் அதிகாரப்பூர்வ விதிகளின்படி இதோ:
நீங்கள் நெற்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் அல்லது யூரியூப் ஆகியவற்றில் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட திரைப்படங்கள், நாடகத் தொடர்கள் அல்லது காணொளிகளை (On-Demand) மட்டுமே பார்ப்பவர் என்றால், நீங்கள் தொலைக்காட்சி உரிமம் பெறத் தேவையில்லை.
அமேசான் பிரைமில் நேரடியாக ஒளிபரப்பப்படும் கால்பந்து போட்டிகள் (Premier League) அல்லது நெற்ஃபிளிக்ஸ் தளத்தின் நேரடி நிகழ்ச்சிகளை (Live Events) நீங்கள் நேரலையில் பார்த்தால் உரிமம் அவசியம்.
யூரியூப் தளத்தில் தொலைக்காட்சிகளின் நேரடிச் செய்திகள் அல்லது நேரலை நிகழ்ச்சிகளைப் பார்த்தால் உரிமம் அவசியம்.
பிபிசி ஐபிளேயர் (BBC iPlayer) செயலியைப் பயன்படுத்தும் எவரும், எந்தவொரு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கும் தொலைக்காட்சி உரிமத்தை வைத்திருப்பது கட்டாயமாகும்.
தற்போது பிரித்தானியாவில் ஒரு வருடத்திற்கான வண்ணத் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் 180 பவுண்டுகள் (£180) ஆகும். நீங்கள் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ அல்லது பிபிசி ஐபிளேயரையோ பயன்படுத்துவதில்லை என்றால், உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான விதிவிலக்கை (Declaration) முறைப்படி பதிவு செய்ய முடியும்.
உண்மை நிலையை அறிந்து தேவையற்ற அபராதங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! இத்தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Spread the love

