191
தமிழக எழுத்தாளர் மா. அரங்கநாதன் தன்னுடைய 84ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
“வீடுபேறு’, “ஞானக்கூத்து’, “காடன் மலை’ போன்ற சிறுகதை நூல்களையும், “பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூலையும், “பஃறுளியாற்று மாந்தர்’ என்ற புதினத்தையும் இவர் எழுதியுள்ளார். தமிழ் மெய்யில் நிலை சார்ந்த இவரது சிறுகதை நடை தமிழ் இலக்கியத்தில் தனித்துவமானதாக கருதப்படுகிறது.”முன்றில்’ என்கிற இலக்கிய இதழையும் நடத்தியவர். இவரைப் பற்றி “மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்’ என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன்.
மா. அரங்கநாதன், சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணிபுரிந்தவர். மா. அரங்கநாதனின் இறுதிச்சடங்குகள் அன்று திங்கள்கிழமைமாலை 4.00 மணிக்கு புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love