முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே குறைத்திருந்தார் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்து இவ்வாறு பாதுகாப்பினை மஹிந்த குறைத்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பே இவ்வாறு குறைக்கப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 30 ஆக குறைக்கப்பட வேண்டுமென்ற நடவடிக்கையை மஹிந்த ராஜபக்ஸவே மேற்கொண்டார் என குறிப்பிட்டுள்ள அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான சந்திரிக்காவின் பாதுகாப்பினை மஹிந்த குறைத்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.