நஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1938-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஆரம்பிக்கப்பட்ட நஷனல் ஹெரால்ட் பத்திரிகை அசோசியேட்;டட் ஜேர்னல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் வெளிவந்தது. கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பத்திரிகை வெளியிடுவது கடந்த 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிடம் , அசோசியேட்டட் ஜேர்னல் நிறுவனம் 90 கோடி ரூபா கடன் வாங்கி;யிருந்தது. அதன்பின்னர் 2 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துகளைக் கொண்ட அசோசியேட்டட் ஜேர்னல் நிறுவனத்தின் பங்குகள், சோனியா, ராகுல் ஆகியோரால் 50 லட்சம் ரூபா செலுத்தி, 83.5 சதவீதப் பங்குகளைக் கொண்ட யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
முறைகேடாக அசோசி யேட்டட் ஜேர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியதாக் சோனியா காந்தி, மற்றும் ராகுல் காந்தி, உட்பட்டோருக்கு எதிராக பாஜக சிரேஸ்டதலைவர் சுப்பிரமணிய சுவாமி; தொடர்ந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக உள்ள ‘யங் இந்தியா’ சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் வருமான வரித்துறை மனுத் தாக்கல் செய்தநிலையில் இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.