இலங்கை

சுகாதார அமைச்சரை பணி நீக்குமாறு கோரிக்கை


சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதாரத்துறை தொடர்பில் போதியளவு தெளிவுடைய ஒருவரை நாட்டின் சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுகாதார சேவை ஆபத்தில் சிக்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நடவடிக்கைகள் நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக தலையீடு செய்து உரிய தீர்வுத் திட்டமொன்றை வழங்குவார் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் டெங்கு நோய்த் தொற்று பரவல் காரணமாக நாட்டில் பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply