Home இலங்கை ஜனாதிபதி செயலாளருடன் முஸ்லிம் தூதுக்குழு முசலிக்காணி குறித்து பேச்சுவார்த்தை

ஜனாதிபதி செயலாளருடன் முஸ்லிம் தூதுக்குழு முசலிக்காணி குறித்து பேச்சுவார்த்தை

by admin

1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட முன் முசலி மற்றும் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களை நீக்கி வன பாதுகாப்பு பிரதேச பிரகடனத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி செயலாளர் பி.பி அபயகோன் இணக்கம் தெரிவித்தார் என  முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முசலி பிரதேசத்தில் மாவில்லு வனபாதுகாப்பு பிரகடனத்தினால் அப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையிலான உயர்மட்ட மாநாடொன்று  ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது ஜனாதிபதி செயலாளர் இந்த இணக்கத்தை வெளியிட்டார்..

முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸின் தலைமையில் இன்று (16) காலை முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சிவில் இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், மகாவலி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், வனபாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முசலி பிரதேசத்தில் பூர்வீக காணிகள் தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து அறிக்கையொன்றை  சமர்ப்பிப்பதற்கான மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டதென இச்சந்திப்பு தொடர்பாக முஸ்லிம் கவுன்ஸில் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் கலந்து ஆராய்ந்து இக்குழுவின் கால எல்லை பற்றி அறிவிப்பதாகவும்  இந்தப்பிரச்சினையை இழுத்தடிக்காது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி தனக்கு தெரிவித்ததாகவும் 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட்ட மக்களுக்கு பாரிய அநீதி இடம்பெற்றுள்தெனவும் இவர்களுக்கு மேலும் அநீதி இழைக்கப்படமாட்டாதெனவும் ஜனாதிபதி செயலாளர் இக்கூட்டத்தில் தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More