கிளிநொச்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் பிற்பகல் நான்கு மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. கொல்லப்பட்டவர்களது ஆத்ம சாந்திக்காக மதப்பெரியோர்களால் இரங்கல் செய்திகளும் துன்பப்படும் மக்களுக்கான ஆறுதல் செய்திகளும் கூட்டுப் பிரார்த்தனைகள் மூலமாக வழங்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.