177
ஜுலியன் அசான்ஜேவிற்கு எதிரான குற்றச்சாட்டை சுவீடன் வாபஸ் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவுனர் ஜூலியன் அசான்ஜேவிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் சுவீடனில் வழக்குத் தொடர்ந்தால் தம்மை, சுவீடன் அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் என அச்சம் வெளியிட்டிருந்த அசான்ஜே தற்போது லண்டனில் அமைந்துள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் அசான்ஜேவை ஈக்வடோருக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசாங்கம், பிரித்தானியாவிடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love