தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஓர் வஞ்சகமான நரி என பிரபாகரன் கூறியிருந்தார் எனவும் அதன் அர்த்தம் தற்போது புரிகின்றது எனவும் அதனை விடவும் ரணில் மோசமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
70, 71, 88 மற்றும் 89ம் ஆண்டு பாரிய மனித கூட்டுப் படுகொலைகளுடன் ரணிலுக்கு தொடர்பு உண்டு என அவர் குற்றம் சுமத்தியுள்ள அவர் இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையே, ரணிலின் இலங்கை மக்கள் மீதான அடுத்த கூட்டுப் படுகொலைத்திட்டம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தியாவின் காலணியாக இலங்கையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2 comments
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆபத்தானவர், எனப் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கூறியிருக்கின்ற அதே வேளை, அவரின் எடுபிடியான காவியுடுத்த காவாலியொன்று, ‘போதைப்பொருள் கடத்தல், தாக்குதல், குழு மோதல் என எது ஏற்பட்டாலும் அதற்கு முழுக் காரணம் ஞானசார தேரர் என்றே சகலரும் கூறுகின்றனர்’, என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் விந்தை என்னவென்றால், இந்தக் காவாலிக்கு எவரை எவருடன் ஒப்பிடுவதென்று கூடத் தெரியவில்லை? சொந்தப் புத்தியென்று ஒன்று இருந்தால், வீர மறவனான புலித் தலைவருடன் எதையோ உண்ணும் பன்றியை (ஞானசார தேரர்) ஒப்பிடும் எண்ணம் இத் தேரருக்கு வருமா?.
தப்பு எல்லாம், இன்றைய ஆளும் அரசை அரியணையில் இருத்திய மக்களுடையதே, என்றால் அது மிகையில்லை. அன்றைய ஆட்சியாளர்களான ராஜபக்ஷர்களுக்கு எதிராக உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இந்தக் காவி தரித்த காவாலியான ஞானசாரதேரருக்குப் பிரதமரை, ‘பேடி’, (பொண்ணையா) என்று விளிக்கும் துணிவு எங்கிருந்து வரும்?
பொதுபல சேனாவின் கூற்றில் எந்தத் தவறூம் இருப்பதாகத் தெரியவில்லை. ’இந்திய தேசவிஸ்தரிப்புக்கு’ எதிரான கடும் போக்காளர்களான, ஜே.வி.பி இயக்கத்தின் இரு எழுச்சிகளையும் அடக்குவதில் தீர்க்கமான பங்கு வகித்ததுவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியின் குடியியல் உரிமையை தற்காலிகமாகப் பறித்ததுவும், விடுதலைப்புலிகளுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையை திருப்பி அனுப்ப காரணமாக இருந்ததுவும், அச் சந்தர்பத்தில் ‘புலிகள் புல்லைத் தின்னாது’ எனக்கூறி விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பும் ஆயுதங்கள் வழங்கியதுவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ‘அமைதிக்கான யுத்தம்’ நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே புலிகளுடன் ஒரு இரகசிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதுவும், சுனாமி நிவாரண நிதியை புலிகளுடன் பங்கிட்டுக் கொண்டதுவும் யார்? யூ.என்.பி தானே? இவை அனைத்தும், பொதுபல சேனாவின் பார்வையில் தேசத்துரோகம் தானே? இதுதான் இனவாத தேசியப் பார்வையாகும். தம்மைத்தவிர அனைவரும் துரோகிகள் என்பதே இனவாத தேசியவாதிகளின் சித்தாந்தமாகும். பிரபாகரனின் பார்வையும் இதுதானே? இந்திய ஆதரவு, சம்தர்ம ஆதரவு, சிங்கள ஆதரவு எனக்கூறி எத்தனை இயக்கங்கள், தனிநபர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டார்கள். எத்தனை ஆயிரக்கணக்கான தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டாரகள். இன ஒழிப்பு எவ்வளவு கொடூரமானதோ, அதே போன்றதுதான மாற்றுக்கருத்தாளர்கள் ஒழிப்பாகும். ஆகவே பிரபாகரனை, றணிலுடன்(யூ.என்.பியுடன்) ஒப்பிட்டுக்கூறுவதை தவறு என்று கூறுவதற்கில்லை. எப்பொருள் யார்வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு?