Home விளையாட்டுபிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை திடீர் மரணம்

பிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை திடீர் மரணம்

by admin


பிரித்தானியாவின் பிரபல பரிதிவட்ட வீச்சு வீராங்கனை பிலிப்பா ரோல்ஸ் (Philippa Roles ) திடீர் மரணம் அடைந்துள்ளார். இறக்கும் போது பிலிப்பா ரோல்ஸ்க்கு 39 வயது என்பது குறிப்பிடத்தக்கது. 2004 மற்றும் 2008 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், பிலிப்பா ரோல்ஸ் பிரித்தானியாவை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

பிலிப்பா ரோல்ஸ்சின் இறப்பிற்கு பிரித்தானிய மெய்வல்லுனர் பேரவையின் பிரதம அதிகாரி நெய்ல் டி வொஸ் இரங்கல் வெளியிட்டுள்ளார். பொதுநலவாய நாடுகள் போட்டித் தொடர்களிலும் இவர்  பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More