பிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதுடன் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
மறுபுறத்தில் மேற்குலக நாடுகளின் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் உறவுகள் குறித்து ஈரான் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு பயங்கரவாதத்தை முற்று முழுதாக இல்லாதொழிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது. செயற்கை ரீதியாக கூட்டணிகளை அமைத்து அதன் ஊடாக பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் நடவடிக்கைகள் பயனற்றது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.