குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
5 முதல் 15 பில்லியன் ரூபா வரையில் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு குறித்த காலத்தில் பாரியளவு லாபம் ஈட்டியுள்ள மோசடியுடன் தொடர்புடைய நிறுவனத்தை சீல் வைத்து பூட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கோப் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை ஆகியனவற்றிலும் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் நிதிச் சலவைச் சட்டத்தின் கீழ் 33000 ரூபா பெறுமதியான சுவரொட்டிகளுக்காக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வளவு பாரிய தொகை மோசடி இடம்பெற்றமை குறித்து விசாரணை நடத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.