Home இலங்கைஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி:-

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி:-

by admin

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவி வழங்கியுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 3 லட்சம் யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

தொண்டு நிறுவனங்களின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய வாழ் மக்கள் வழங்கும் உதவியாக இதனை கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனர்த்த முகாமைத்துவ ஆணையாளர் கிறிஸ்டோஸ் ஸ்டாலியான்டீஸ் தெரிவித்துள்ளார். சுத்தமான குடிநீர், வீட்டு அத்தியாவசிய உபகரணங்கள் உள்ளிட்டன பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More