சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் இவ்வாறு வீதியை மறித்து போராட்டம் செய்வது சட்டத்திற்கு முரணானது போக்குவரத்துக்கு தடையாக இருப்பவர்களை கைது செய்யவும் முடியும் இப்போராட்டத்தை நிறுத்த தேவையான ஆயுதங்கள் கருவிகள் நீதிமன்ற உத்தரவு என்பன எம்மிடம் உள்ளது நாம் எதனையும் செய்யவில்லை எனவே பாதையின் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதிக்காத வகையில் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்
இதற்கமைய மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் சென்று தங்களுக்கு நியாயமான பதிலை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து பாதிக்காத வகையில் போராட்டத்தை முன்னெடுத்தனா்.