குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையை நிராகரித்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
எந்தவொரு வகையிலும் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை தேசியமயப்படுத்துவதனைத் தவிர வேறும் வழிகள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதற்கு பதிலாக அதனை சட்ட ரீதியானதாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.