Home இலங்கைவடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் – எதிர்க்கட்சித்தலைவர் – கூட்டமைப்பு தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்

by admin

வட மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர் பதவிகள் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும்  வட மாகாண முதலமைச்சர்  சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த கலந்துரையாடலானது இவ் வாரத்திற்குள் மேற்கொள்ள  நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து  அவர்கள் பதவிவிலகியுள்ள நிலையில்  இரு அமைச்சுக்களும் முதலமைச்சரினால்  பொறுப்பேற்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த  பதவிகளுக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பிலேயே  மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More