குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வரையில் காத்திருக்காது தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்ய வேண்டுமென கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவ மாணவியருக்கு நியாயமான ஓர் தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழகத்தையும் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு வீதியில் தீர்வுத் திட்டமொன்றை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.