152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ரஸ்யாவிற்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை இன்றைய தினம் முடித்துக் கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது அவர் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தந்திரோபாய உறவுகள் பாரியளவில் வலுப்பெற்றுள்ளதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
Spread the love