Home இலங்கை பாதுகாப்பு சார் விடயங்கள் குறித்து யாழ் படையினர் – ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கம்

பாதுகாப்பு சார் விடயங்கள் குறித்து யாழ் படையினர் – ஐ.நா பிரதிநிதிக்கு விளக்கம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பாதுகாப்பு சார் விடயங்கள் குறித்து யாழ்ப்பாண படையினர், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிறுபான்மை விவகாரங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ரீடா இசாக்கிற்கு விளக்கம் அளித்துள்ளனர். ரீடா இசாக்கும் மேலும் இரண்டு பிரதிநிதிகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். பலாலி இராணுவ முகாமில் வைத்து ரீடா இசாக் உள்ளிட்ட பிரதிநிதிகள், யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

யாழப்பாண குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து யாழ்கட்டளைத் தளபதி விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளுக்கு யாழ் கட்டளைத் தளபதி நினைவுச் சின்னங்களை வழங்கியிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More