Home இந்தியாதனுஷ்கோடியில் கைதான இரு இலங்கையர்கள்: வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பா? – அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு!

தனுஷ்கோடியில் கைதான இரு இலங்கையர்கள்: வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பா? – அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு!

by admin
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்று இந்தியக் கடலோரப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களுக்கும், அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய ஜி. விக்னேஸ்வரன் மற்றும் எம். லூசிநாத் ஆகிய இருவரே இவ்வாறு தனுஷ்கோடி கரைப்பகுதியில் வைத்து கடலோரப் காவற்துறையினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டனர்.
முக்கிய பின்னணி விபரங்கள்:
துப்பாக்கிச் சூட்டுத் தொடர்பு: கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இவர்களுக்கு நேரடித் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வழக்குகள்:
இவர்கள் இருவருக்கும் எதிராக இலங்கையில் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருச்சி முகாமிற்கு மாற்றம்:
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது விசாரணைக்குப் பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் அவர்கள் இருவரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More