182
இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இதுவெனவும் அதனைக் குறிக்கும் முகமாக இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love