குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்து பிழையானது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம் யாருக்கும் தண்டனை விதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர்களை இலக்கு வைத்து இந்த சட்டம் உருவாக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் படையினரை காட்டிக் கொடுக்காது என குறிப்பிட்டுள்ள அவர் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை அனைவரும் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த சட்டம் உருவாக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.