குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் துணைத் தலைவர் ஏஞ்சல் மரியா வில்லார் ( angel-maria-villar ) பதவி விலகியுள்ளார். ஸ்பெய்னின் கால்பந்தாட்பட்ட பேரவையின் தலைவராக ஏஞ்சல் மரியா வில்லார் கடமையாற்றி வந்தார்.
இந்தப் பதவியிலிருந்து பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை, ஐரோப்பிய கால்பந்தாட்டப் பேரவை ஆகியனவற்றிலிருந்தும் அவர் விலகிக் கொண்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தி ஏஞ்சல் மரியா வில்லார் மற்றும் புதல்வர் இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து ஓராண்டு காலத்திற்கு ஸ்பெய்ன் கால்பந்தாட்டப் பேரவையிலிருந்து பணி நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தாம் எந்தவொரு மோசடியிலும் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளாக ஸ்பெய்ன்; கால்பந்தாட்டப் பேரவையின் தலைவராக ஏஞ்சல் மரியா வில்லார கடமையாற்றியுள்ளார்.