குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தாமே மேற்கொண்டதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட இராணுவ சர்ஜன்ட் மேஜர் ஐ.ஜீ. ஜயமன்னவின் சடலம் தோண்டி எடுக்கப்பட உள்ளது. அண்மையில் தாமே லசந்தவை கொலை செய்ததாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலனாய்வு உத்தியோகத்தர் தாக்குதலை நடத்தவில்லை எனவும் கடிதம் எழுதி வைத்து வைத்து விட்டு குறித்த ஓய்வு பெற்றுக்கொண்ட சார்ஜன்ட் மேஜர் ஜயமன்ன தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
ஜயமன்னவின் சடலம் கேகாலை புவக்தெனிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்பய்பட்டிருந்தது.பொது மயானத்தில் நல்லடக்கம் செய்பய்பட்டிருந்தது. கேகாலை நீதவான் கிஹான் மீகஹாகே முன்னிலையில் இன்று குறித்த சடலம் மீளவும் தோண்டி எடுக்கப்பட உள்ளது. ஜயமன்ன 2007ம் ஆண்டு இந்த உத்தியோகத்தர் ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 2009 ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டிருந்தார்.
தற்கொலை செய்து கொண்ட புலனாய்வு உத்தியோகத்தரின் வங்கிக் கணக்குகள் விசாரணைக்கு
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை தாமே மேற்கொண்டதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட, புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இராணுவ சார்ஜன் மேஜரான எதிரிசிங்க ஜயமான்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் 30 வங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர்.
கடந்த மூன்று மாத காலத்தில் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர் மேற்கொண்ட தொடர்பாடல் குறித்து விசாரணை நடத்த தொலைபேசி உரையாடல் விபரங்கள் பற்றிய தகவல்களும் பரிசீலனை செய்யப்பட உள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த அனுமதியளிக்குமாறு ஐந்து தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு புலனாய்வுப் பிரிவினர்N மேலும் கோரியுள்ளனர். வங்கிக் கிளைகளின் முகாமையாளர்கள் இந்த தகவல்களை வழங்க வேண்டுமெனவும், தொலைபேசி நிறுவனங்கள் தகவல்களை வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.